கொவிட் தொற்றினால் மேலும் 48 பேர் மரணம்!

கொவிட் தொற்றினால் மேலும் 48 பேர் மரணம்!

நாட்டில் நேற்று (26)  கொவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 28 ஆண்களும், 20 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றின் காரணமாக நாட்டில் கடந்த ஐந்து தினங்களில் 236 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

அதற்கைமய, கடந்த 22 ஆம் திகதி 43 மரணங்களும், 23 ஆம் திகதி 52 மரணங்களும், 24 ஆம் திகதி 45 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன், கடந்த இரு நாட்களில் தலா 48 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of text that says 'රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Government Information 27.07.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 745/2021 வெளியி ப்பட்ட நேரம் 19.00 2021.07.27ம திகதி அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 27ஆம் திகதி அறிக்கையிடம் ப்பட்டதும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (26) உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 00 இடையில் 01 மொத்தம் 60 வயது மற்றும் அதறகு மேல் 06 மொத்தம் 01 03 22 09 16 28 38 20 48 Dinry Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කොළුඹ බිලංකාව. +9411)2515759 www.news.lk'