ஹிஷாலினி மரணம்: டயகம பகுதியில் விசாரணைகள் ஆரம்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பில் ஆராயும் காவல்துறை குழு இன்று டயகம பகுதியில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்காக அந்த காவல்துறை குழு நேற்று மாலை கொழும்பில் இருந்து டயகம பகுதிக்கு சென்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய சிறுமிகளிடம் குறித்த காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளனர்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு குறித்த தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் 11 சிறுமிக்கு பணிக்கு அமர்த்தப்பட்டதாக நீதிமன்றில தெரியவந்துள்ளது.