வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
கடலோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தால் மீனவர்கள் மற்றும் கடற்படையினரை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் காற்று மணித்தியாலயத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.