தூக்கியெறியப்பட்ட மாஸ்க்: மணமகளுக்கு அட்டகாசமான உடையாக மாற்றிய டிசைனர்

தூக்கியெறியப்பட்ட மாஸ்க்: மணமகளுக்கு அட்டகாசமான உடையாக மாற்றிய டிசைனர்

இங்கிலாந்தில் 1,500 தூக்கியெறியப்பட்ட முகக் கவசங்களை பயன்படுத்தி திருமண உடை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியது.

தற்போது கொரோனா பரவல் குறைந்தாலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பது காட்டாயமாகத்தான் உள்ளது.

ஆனால், இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்த்தப்பட்டுள்ளன.

இதனை அந்த நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஆடை வடிவமைப்பாளர் Tom Silverwood என்பவர் மணப்பெண் அணிவதற்காக 1,500 தூக்கியெறியப்பட்ட முகக் கவசங்களை பயன்படுத்தி திருமண உடை தயாரித்துள்ளார்.

இந்த உடையை Jamima Hambro என்ற மாடல் பெண் அணிந்து விளம்பரப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் அதிகம் பேரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறு புதுமையாக ஆடையை வடிவமைத்த Tom Silverwood-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.