மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!
நாட்டில் மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லலைத்தீவு, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(26) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில், மல்விட்ட கிராம சேவகர் பிரிவின் கோலிந்தவத்த இலக்கம் 3ஆம் பிரிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் பரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில், பழைய கொலனி கிராம சேவகர் பிரிவின் திவித்துர தோட்டமும், மொனராகலை மாவட்டத்தில், ஹிந்திகிவ்ல கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நக்கலவத்த கிராமமும், மில்லகெலவத்த கிராமமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
