அதிபர், ஆசிரியர்களிடம் கல்வியமைச்சின் செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை!

அதிபர், ஆசிரியர்களிடம் கல்வியமைச்சின் செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை!

சம்பள பிரச்சினைகளை முன்வைத்து, இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தீர்வினை எதிர்வரும்  நாட்களில் பெற்றுக்கொடுப்பதாக கல்விமையச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

ஹொரனையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.