
சுற்றுலா வலயங்களில் 5 உள்நாட்டு விமான நிலையங்கள் அபிவிருத்தி!
சுற்றுலா வலயங்களை மையப்படுத்தி, ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
கொவிட்-19 பரவலின் பின்னர், நாட்டில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும்போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கும், புதிய உபாயமாக இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, சீகிரியா, கொக்கலை, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் கிராந்துருகோட்டை முதலான பிரதேசங்களை மையப்படுத்தி, உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.