வெளிநாட்டவர்களின் வருகையை மட்டுப்படுத்தவுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்!
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படுமென ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைகளை நாட்டு அழைத்து வரும் பணிகள் இதுவரை முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்நது.
இதன் படி இதுவரையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களாலேயே கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது.
தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இந்த செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.