மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுப்படும் பஸ்களுக்கு கிடைக்க உள்ள சலுகை

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுப்படும் பஸ்களுக்கு கிடைக்க உள்ள சலுகை

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படாவிட்டாலும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

´மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கபடாவிட்டாலும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க கொவிட் ஒழிப்பு குழு அனுமதியளித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கப்பட்டதும் முழுமையான போக்குவத்து வசதிகளை வழங்குவோம். சிலவேளை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீடிக்கப்பட்டாலும் சில பஸ் வண்டிகளுக்கு போக்குவரத்தில் ஈடப்பட சந்தர்ப்பமளிக்கப்படும்´ என்றார்.