மின்னொளி மைதானமாக மாற்றப்பட்ட மைதானம்!

மின்னொளி மைதானமாக மாற்றப்பட்ட மைதானம்!

கிராமிய விளையாட்டு மைதானம் அமைத்தல் திட்டத்தின் கீழ் மின்னொளி மைதானமாக அமைக்கப்பட்ட மணற்காடு புனித அந்தோனியார் விளையாட்டு கழக மைதானத்தை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பிரதேச இளைஞர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த இவ்விடயத்தை கவனத்தில் எடுத்த அங்கஜன் இராமநாதன், கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்று இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அவர், விளையாட்டரங்குக்கான மின் இணைப்பை ஆரம்பித்து வைத்ததுடன், குறித்த மைதானத்தின் முதலாவது மின்னொளி உதைப்பந்தாட்ட போட்டியையும் ஆரம்பித்தார்.

இதன்போது, இத்திட்டத்தை கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தியமைக்காக அங்கஜன் இராமநாதனுக்கு மணற்காடு பிரதேச மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளை நேரில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)