காலி - ஹபரடுவ பகுதியிலுள்ள கோவிலில் 16 பேருக்கு கொவிட் தொற்று!

காலி - ஹபரடுவ பகுதியிலுள்ள கோவிலில் 16 பேருக்கு கொவிட் தொற்று!

காலி - ஹபரடுவ பகுதியில் உள்ள பௌத்த விசாரையில் 13 பிக்குகள் உள்ளிட்ட 16 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோவிலின் தலைமை அதிகாரியொருவருக்கும் பிக்கு ஒருவருக்கும் கொவிட் தொற்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த ஏனையோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 13 பிக்குகளுக்கும் 3 பொதுமக்களுக்கும் என 16 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.