மாகாண மட்டத்தில் சிறுவர் நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கத் திட்டம்
மாகாண மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன.
நாட்டில் இவ்வாறான நீதிமன்றங்கள் இரண்டு மாத்திரமே உண்டு. சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கு இவை போதுமானதல்ல.
இதேபோன்று, வழக்கு விசாரணை சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் வயதானவர்களுடன் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றமையும் நிலவுகின்றது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு, அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், இவ்வாறான நீதிமன்றங்கள் 18 ஐ அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவி சுஜாதா அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் காலம் கடந்த சிறுவர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)