இன்றைய ராசிபலன் - 23/07/2021

இன்றைய ராசிபலன் - 23/07/2021

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப் பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். உத்தியோகத்தில் விமர் சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. தர்ம சங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


மிதுனம்

மிதுனம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடிவரும். புது நட்பு மலரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக் கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.


சிம்மம்

சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.


கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் தடை யின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.


துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்:  சுறுசுறுப்புடன் செயல்பட்டுத் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தி யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.


தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். அனாவசியமாக யாருக்கும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


மகரம்

மகரம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: வீரியத்தை விட காரியம் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.


மீனம்

மீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள் வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக் காட்டுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.