ஹெரோயினுடன் கைதான 3 பேர் மீண்டும் விளக்கமறியலில்!
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான களுத்துறை தெற்கு காவல்துறை நிலைய உப பரிசோதகர் உள்ளிட்ட 3 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 3 பேரும் காலி பிரதான நீதிவான் ஹர்சன கெக்குனவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்படி அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகத்துக்குரியவர்களின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக் கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.