தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் கைது
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பெண்களுக்காக வேயங்ஙகொட, நைவல பகுதியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றில் இருந்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள ஏனைய பெண்களின் தகவல்களை எடுக்க எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வதாக தனிமைப்படுத்தல் மத்திய நிலைய அதிகாரிகள் முறைப்பாடு செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனடிப்படையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் 2019 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் 6 ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கி போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.