கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கைப் பிரேரணைக்கான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.