
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை; 3,139 பேர் கைது!
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சில குற்றங்களின் அடிப்படையில் 3,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கியுடன் 11 பேரும், போதைப்பொருட்கள் தொடர்பில் 1,350 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக காவல்துறை அதிகாரிகள் 15,292 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.