திடீரென மயக்கம் போட்ட மணமகள்!! அடுத்த நொடியே மணமகன் செய்த காரியம்- வைரல் வீடியோ
திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றே, அப்போது உறவினர்கள் சூழ்ந்து கொள்ள சில கலாட்டாக்களும் நடக்கும்.
இன்ஸ்டாவில் வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமத்தை வைக்க முயன்ற போது திடீரென மணமகள் மயங்கி விழுகிறார்.
இதைப்பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியாக, மணமகனோ, மாலை, தொப்பி என அனைத்தையும் தூக்கி வீசி எறிந்துவிட்டு ஓட்டம்பிடிக்கிறார்.
அவரை தடுத்துநிறுத்த மற்றவர்கள் முயன்றும் பலனில்லாமல் போகிறது, இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.