டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த யுவதியை தேடும் பணிகளில் தாமதம்!
திம்புளை - பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திம்புளை பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் நேற்று பிற்பகல் யுவதி ஒருவர் தவறி விழுந்த நிலையில் காணாமல்போயிருந்தார்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து காணாமல் போனதாக காவல்துறை அறிவித்தது.
இதனையடுத்து இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் விமான படையினர் இணைந்து காணாமல்போன யுவதியை மீட்பதற்கான பணிகளை நேற்று முதல் முன்னெடுத்தனர்.
எனினும் நீர்வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் கடுமையான நீரோட்டம் காணப்படுவதாலும் தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை - லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.