கண்டியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

கண்டியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

கண்டி மாவட்டத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பமானது.

இதற்காக பல தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தெல்தோட்ட பிரதேச செலயகத்துக்குட்பட்ட பகுதியில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலஹா பிரதேச வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், கலஹா நில்லம்பே மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கம்பளை ஜாதிக உறுமய மத்திய மண்டபத்திலும் அதிகமாக நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகஸ்தர்களும் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.