சமூர்த்தி வங்கிக்கான இரண்டு மாடி கட்டிடத் தொகுதி திறப்பு

சமூர்த்தி வங்கிக்கான இரண்டு மாடி கட்டிடத் தொகுதி திறப்பு

தெஹியோவிட்ட அட்டலுகம்புரவில் சமூர்த்தி வங்கிக்கான இரண்டு மாடி கட்டிடத் தொகுதி கடந்த 16 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் திறக்கப்பட்டது.

1 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் இந்த சமூர்த்தி வங்கிக்கான இரண்டு மாடி கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

அட்டலுகம்புர பிரதேசத்தில் சமூர்த்தி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை நான்காயிரம். 18,000 பேர் இவ் வங்கியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுத்த் மஞ்சுள, ராஜிகா விக்ரமசிங்க, கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய உட்பட அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)