தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண விசேட ஆய்வுகள்
தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளை முன்னெடுக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில், தனியார் துறைக்கு அவசியமான தொழிற்படையை அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தனியார் துறையின் அனைத்து நிறுவனங்களும், அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கும் இலக்கை பூர்த்தி செய்வதற்கான தொழிற்படை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.