உந்துருளியில் பட்டத்தின் நூல் சிக்கி விபத்து: தாயும், ஒன்றரை வயது மகளும் பலி

உந்துருளியில் பட்டத்தின் நூல் சிக்கி விபத்து: தாயும், ஒன்றரை வயது மகளும் பலி

உந்துருளி ஒன்றில் பயணிக்கையில் பட்டத்தின் நூல் சிக்கி ஏற்பட்ட விபத்தில் தாய் ஒருவரும் அவரது ஒன்றரை வயது மகளும் பலியான சம்பவம் ரத்கம பகுதியில் பதிவானது.

நேற்றிரவு காலி - கொழும்பு பிரதான வீதியின் ரத்கம - பிட்டிவெல்ல பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வான்படை சிப்பாய் ஒருவர் தமது மனைவி மற்றும் அவரது ஒன்றரை வயதான குழந்தையுடன் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்பலியானவர்கள் கிங்தொட்டை - பியதிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.