இன்று இதுவரை 1,447 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

இன்று இதுவரை 1,447 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 467 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 980 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

அதற்கமைய, இன்று இதுவரையில் 1,447புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 283,507 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 962  பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.

அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 255, 833 ஆக அதிகரித்துள்ளது.