தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் போலி தகவல்களை பரப்பும் தரப்பினர் தொடர்பில் அவதானம்!

தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் போலி தகவல்களை பரப்பும் தரப்பினர் தொடர்பில் அவதானம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த போலி தகவல்களை கருத்திற் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், அரசியல் மற்றும் குறுகிய குறிக்கோள்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாகம் தொடர்பில் போலி பிரசாரங்களை பரப்ப யாருக்கும் அனுமதியில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.