தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
நிலம் தாழிறங்கல் அச்சுறுத்தல் காரணமாக கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் சகல நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அந்த அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நான்கு மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் இருந்து வெளியேறுமாறு கட்டட ஆராய்ச்சி நிறுவக அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த காரியாலயத்திற்கு அருகாமையில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக நிலம் தாழிறங்குவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.