இலங்கையிடமிருந்து எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை! - IMF

இலங்கையிடமிருந்து எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை! - IMF

இலங்கையிடம் இருந்து நிதி உதவிக்கான கோரிக்கை எதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் மசாஹிரோ நொசாகி இதனைத் தெரிவித்துள்ளார் என்று, இன்னர் சிட்டி ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் ஒத்துழைத்துச் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பேரினப் பொருளாதார அபிவிருத்தி, பொதுக் கண்ணோட்டம் மற்றும் பேரினப் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரையில் நிதி உதவிக்கான எந்த கோரிக்கையும் இலங்கையிடம் இருந்து முன்வைக்கப்படவில்லை.

ஆனால் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அதன்பாலுள்ள தெரிவுகளை முன்னிலைப்படுத்தி பேச்சுவர்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம், என்று நாணய நிதியத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.