டிப்பர் ரக வாகனத்தில் மோதி சிறிய ரக வாகனத்தின் சாரதி பலி!
தம்புள்ளை குருணால் இம்பன் கட்டுவ பிரதேசத்தில் இன்று (17) காலை டிப்பர் ரக வாகனமொன்று மற்றும் சிறிய ரக பாரவூர்தியொன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான சிறிய ரக பாரவூர்தியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டிப்பர் ரக வாகனத்தின் சாரதிக்கும் உதவியாளருக்கும் நித்திரைக் கொண்டதால் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கலேவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.