சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 800 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 800 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது!

நேற்றிரவு களனி காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

800 கிலோகிராம் மஞ்சள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சளார் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மஞ்சளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.