இன்று மேலும் 367 புதிய தொற்றாளர்கள்!
நாட்டில் மேலும் 367 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 918 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகிவந்த 71 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 1,517 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 282, 060 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 918 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.
அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 254,871 ஆக அதிகரித்துள்ளது.