சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!

சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!

இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக சினோவெக் கொவிட் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையினுள் தற்போது, அஸ்ட்ராசெனெகா, சைனோபாம், ஸ்புட்னிக் வீ , பைஸர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது தடுப்பூசியாக சீனாவின் சினோவெக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசி இன்றைய தினமே நாட்டுக்கு முதல் முறையாக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் தற்போது, 4 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.