இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நுவரெலியா, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நுவரெலியா, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகழக சட்ட மூலத்தை விலக்கிக்கொள்ளல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.

அதற்கமைய, இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நுவரெலியா மத்திய அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10.30க்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை விடுவிக்கவும், இலவச கல்வி உரிமையை பறிக்க வேண்டாம், கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தோர் வலியுறுத்தியிருந்தனர்.

அதேநேரம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டிருந்தனர்.

No description available.