கிழக்கில் 168 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

கிழக்கில் 168 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 168 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் இதனை தெரிவித்துள்ளார்.

கல்முனைப் பிராந்தியத்திலே அதிகளாவிலான தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 பேருக்கும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் 30 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 26 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.