ஹெரோயினுடன் இருவர் கைது
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை 6 மணியளவில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் துறைமுக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்ததாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கிராம் 900 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பிரிதொரு நபருக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 4ம் கட்டை, கண்டி வீதியைச் சேர்ந்த 23 நபரும், ஜயசுந்தர மாவத்தை, 5ம் கட்டை, கண்டி வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்கள் என துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.