நிதி அமைச்சர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார்

நிதி அமைச்சர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் சந்தித்துள்ளனர்.

நிதி அமைச்சில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க, சீன, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களையும், இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களையும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புக்களின்போது, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டம் குறித்து, இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.