நேற்று 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது
இலங்கையில் நேற்று ஒரே நாளில் 384,763 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதுவரையான காலப்பகுதியில் நாள் ஒன்றில் இலங்கையில் அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.