தொடருந்து கட்டுப்பாட்டாளரைத் தாக்கிய இருவர் கைது!

தொடருந்து கட்டுப்பாட்டாளரைத் தாக்கிய இருவர் கைது!

தெஹிவளையில் தொடருந்து கட்டுப்பாட்டாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், இரண்டு இளைஞரகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை தொடருந்து நிலையத்தில் வைத்து, வாத்துவயிலிருந்து ராகம நோக்கி நேற்றுப் பயணித்த தொடருந்தில் முகக்கவசமின்றி ஏறுவதற்கு இரண்டு இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.

இதன்போது தொடருந்து கட்டுப்பாட்டாளர், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து தெஹிவளை காவல்துறையில் பதிவுசெய்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.