சேதன உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

சேதன உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

சேதன உரத்தைத் தயாரித்து தமது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்ரயர் ஒன்றுக்கு 12,500/= ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரயர்களுக்கு (05 ஏக்கர்கள்) அதிகரிக்காமல் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

கமத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனை ஒன்றுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2021/2022 பெரும்போகத்திற்கான நெற் செய்கையில் விவசாயிகள் உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம்

2021/2022 பெரும்போகத்திற்காக 800,000 ஹெக்ரயர்கள் அளவில் நெற் செய்கைக்கான சேதன உரத்தைத் தயாரித்துக் கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சு வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துள்ளது. அதன் கீழ் பிரதானமாக கமநல சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் பிரகாரம் விவசாயிகள் தரமான சேதன உரத்தைத் தயாரிப்பதற்கும், அனுமதிப்பத்திர உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையின் அளவுகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, சேதன உரத்தைத் தயாரிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக சேதன உரத்தைத் தயாரித்து தமது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்ரயர் ஒன்றுக்கு 12,500/= ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரயர்களுக்கு (05 ஏக்கர்கள்) அதிகரிக்காமல் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.