மன்னாரில் நாளை முதல் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள மேலும் 22,230 பைஸர் தடுப்பூசிகள் நாளைய தினம் முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு குறித்த தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 19,500 பேருக்கு பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.