103 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

103 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

103 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம் கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் - அனலைத்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குறித்த கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 11 பொதிகளில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 34 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இலுவைப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாச்சிக்குடா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் - குருநகர் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் இலுவைப் படகுடன் சந்தேகநபர்களை காங்கேசன்துறை காவல்துறையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.