2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் 9 மாவட்டங்களிடையே பகிரப்படும்
இன்றைய தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளில் 5 இலட்சம் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் நுவரெலியா, பதுளை, மாத்தளை, அநுராதப்புரம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் வீதம் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டிற்கு மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்க பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.