கம்பளையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

கம்பளையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

கம்பளை உடப்பலாத்தை சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை செலுத்தப்படவுள்ளன.

நான்கு மத்திய நிலையங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக உடப்பலாத்தை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.பாஹிம் தெரிவித்துள்ளார்.

இதன்படி சரஸ்வதி மத்திய கல்லூரி நிலையத்தில் 7,549 பேருக்கும் கம்பளை ஜாதிக ஹெல உறுமய மத்திய நிலையத்தில் 9,349 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அத்துடன் கம்பளை விக்ரமபாகு தேசிய கல்லூரி மத்திய நிலையத்தில் 3,513 பேருக்கும், கம்பளை மாவத்துர பயிற்சி மத்திய நிலையத்தில் 1,992 பேரும் அடங்கலாக 22,403 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன