மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானம் இலங்கை வந்தடைந்தது

மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானம் இலங்கை வந்தடைந்தது

சீனாவிலிருந்து மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானமும், சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தது. இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன்படி 20 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 மற்றும் 869 ரக விமானங்கள் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டடுள்ளன. 

அதேநேரம் இந்த சைனோபாம் தடுப்பூசிகள் இதுவரை முதலாவது தடுப்பூசியேனும் செலுத்தப்படாதவர்களுக்காக ஏற்றப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.