வர்த்தக நிலையத்துக்குள் புகுந்த மகிழுந்து! (படங்கள் இணைப்பு)
கொழும்பு - ஹைட்பார்க் பகுதியில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி வர்த்தக நிலையம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மகிழுந்து வர்த்தக நிலையத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் காவல்துறை தெரிவிக்கின்றது.




