நாட்டில் நேற்று 1,557 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,557 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்களில் 1,515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 271,483 ஆக அதிரிகத்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும், 27057 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் நேற்று 1,451 பேர் நேற்று கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 241,035 ஆக உயர்வடைந்துள்ளது.