விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது

விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது

விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஒருவரும், விவசாய போதனாசிரியர் ஒருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பாக்குகள் தொடர்பில் போலியாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சான்றிதழை வழங்கியமைக்காக மேற்படி இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.