பொலிவியா ஜனாதிபதி ஜீனைன் ஏயெஸ்க்கு கொவிட்-19 தொற்று!

பொலிவியா ஜனாதிபதி ஜீனைன் ஏயெஸ்க்கு கொவிட்-19 தொற்று!

பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸ்க்கு (Jeanine Añez) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமுடன் இருக்கின்றேன். எனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர உள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பொலிவியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தென்அமெரிக்க நாடான பொலிவியாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 44,113பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,638பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.