ஒலிம்பிக்கை முன்னிட்டு டோக்கியோவில் அவசரகால நிலை பிரகடனம்

ஒலிம்பிக்கை முன்னிட்டு டோக்கியோவில் அவசரகால நிலை பிரகடனம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.