அஜித் ரோஹண கடமைகளை பொறுப்பேற்றார்!

அஜித் ரோஹண கடமைகளை பொறுப்பேற்றார்!

காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று(08) போக்குவரத்து மற்றும் குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கான கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குற்றவியல் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பணியகம், போக்குவரத்து கட்டுப்பாடு, வீதி பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகியத் துறைகள் இந்த பதவியின் கீழ் வருகின்றன.