பல்கலைகழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை
நாட்டிள் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துமாறு துணைவேந்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் -19 நிலமையில் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் ஒன்லைன் மூலம் முன்னெடுத்துவரும் கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே துணைவேந்தர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.